சேத்துப்பட்டு அருகே =ஓய்வு விஏஓ கார் மோதி பலி

சேத்துப்பட்டு, ஏப்.20: சேத்துப்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற விஏஓ பரிதாபமாக உயிரிழந்தார். சேத்துப்பட்டு அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம்(76), ஓய்வு பெற்ற விஏஓ. இவர் நேற்று முன்தினம் தன் சொந்த வேலைகாரணமாக இருசக்கர வாகனத்தில் சேத்துப்பட்டு வந்தார். அங்கு தன் வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார். சேத்துப்பட்டு- வந்தவாசி சாலை பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு சென்று விட்டது. இதில் பொன்னுரங்கம் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் படுகாயமடைந்த பொன்னுரங்கத்தை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பொண்ணுரங்கத்தின் மகன் ரமேஷ் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>