பிளஸ்2 மாணவன் தற்கொலை

வேட்டவலம், ஏப்.20: வேட்டவலத்தில் பிளஸ்2 மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேட்டவலம் ஊராகாளி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(38), கூலித்தொழிலாளி. இவரது மகன் விஜயராமன்(18), வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 14ம் தேதி மாலை மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மனமுடைந்த அவர் விஷம் குடித்துவிட்டு 15ம் தேதி காலை தனது அம்மா தனலட்சுமியிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், விஜயராமனை சிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர் 17ம் தேதி மேல் சிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு விஜயராமன் உயிரிழந்தார். இதுதொடர்பாக நேற்று அர்ஜூனன் வேட்டவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் எஸ்ஐ கருணாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>