மகாவீர் ஜெயந்தி மதுக்கடைகளை 25ம் தேதி மூட உத்தரவு

நாமக்கல், ஏப். 20: மகாவீர் ஜெயந்தியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் 25ம் தேதி மகாவீரர் ஜெயந்தி தினத்தையொட்டி, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், ஓட்டல்களில் உள்ள லைசென்சு பெற்ற பார்கள் அனைத்தும் மூடவேண்டும். அரசின் உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>