திருமலைப்பட்டியில் கிரிக்கெட் போட்டி

சேந்தமங்கலம், ஏப்.20: புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம் திருமலைப்பட்டியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கக்கோப்பை மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. 4 நாட்கள் நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 32 அணி வீரர்கள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் திருமலைப்பட்டி அருண் பிரதர்ஸ் அணியினர் முதல் பரிசும், எடையப்பட்டி கிரிக்கெட் கிளப் அணியினர் 2ம் பரிசும் பெற்றனர். 3ம் பரிசாக சங்ககிரி சிட்டிசன் கிரிக்கெட் கிளப் அணியினரும், 4ம் பரிசாக தம்மம்பட்டி கிரிக்கெட் கிளப் மற்றும் சேலம் லவ் ஸ்டார்ஸ் அணியினரும் பெற்றனர்.

தொடர்ந்து பரிசளிப்பு விழா, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கௌதம் தலைமையில் நடந்தது. சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். இதில் புதுச்சத்திரம் ஒன்றியக்குழு துணை தலைவர் ராம்குமார், துத்திக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், மாவட்ட தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத், நாமக்கல் தொகுதி ஒருங்கிணைப்பாளர் குணாலன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தங்கம் நவீன்ராஜ், ஊராட்சி செயலாளர் லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>