திமுக முகவர்களுக்கு 22ம் தேதி பயிற்சி முகாம்

நாமக்கல், ஏப்.20: வாக்கு எண்ணும் மையத்தில் திமுக சார்பில் முகவர்களாக செயல்படுவோருக்கு காணொலி காட்சி மூலம் வரும் 22ம் தேதி பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் கலந்து கொள்ளவுள்ள முகவர்களுக்கு, காணொலி காட்சி வாயிலான பயிற்சி முகாம் மூத்த வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்கு நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெறுகிறது. இம்முகாமில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேருர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வாக்கு எண்ணும் பணியில் கலந்து கொள்ளும் முகவர்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.இதற்காக அன்று மதியம் கூட்ட அரங்குக்கு வர வேண்டும். இவ்வாறு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>