மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் முகக்கவசம் வினியோகம்

வேலூர், ஏப்.19: வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன், பொதுமக்களுக்கு முகக்கவசங்களும் வழங்கப்பட்டன. கொரோனா 2வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் பல்வேறு துறைகள் மும்முரம் காட்டிவரும் நிலையில் காவல்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முகக்கவசம் அணியாமல் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதுடன், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை வேலூர் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய எல்லைப்பகுதிகளிலும் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, முகக்கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்த்தல், கைகளை அடிக்கடி கழுவுவதன் அவசியம், சானிடைசர் உபயோகம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை பொதுமக்களிடம் காவல்துறையினர் அளித்தனர். மேலும் கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது.

அதேபோல் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஓட்டல் ஊழியர்கள், பஸ், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் என பல தரப்பினரிடமும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. மேலும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குள் சாலைகளில் முகக்கவசம் இன்றி சென்ற பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இப்பணி நேற்றும் தொடர்ந்து நடந்தது.

Related Stories:

>