கே.வி.குப்பம் காவல்நிலையத்தில் வியாபாரிகளுடன் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

கே.வி.குப்பம், ஏப்.19: கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கடைகளில் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி வழங்குதல் உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு பலகைகளை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், வியாபாரி சங்க நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>