அனைத்து ஊழியர்களுக்கும் சமவேலை சமஊதியம் வழங்க வேண்டும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

பெரம்பலூர்,ஏப்.19: அனைத்து ஊழியர்களுக்கும் சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யுமாறு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிவேல்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்குமார் வரவேற்றார். மாநில இணை செயலாளர் அபிமன்னன், மாவட்ட துணை தலைவர் விக்டர் தாமஸ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குமரி அனந் தன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆற்றுப்படுத்துனர்கள், ஆய்வக நுட்புனர்கள், ஏ.ஆர்.டி.கூட்டு மருந்து சிகிச்சை மைய பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க திட்ட இயக்குனரை கேட்டுக்கொள்வது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட திட்ட இயக்குனர், தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்வது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இன்ஷூரன்ஸ், மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கிட திட்ட இயக்குரை கேட்டுக்கொள்வது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணிபுரிந்து உயிரிழக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய இறப்பு நிவாரணம் வழங்கவும், அவர்கள் குடும்பத்திற்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கிட பரிந்துரை செய்திட வேண்டும் என திட்ட இயக்குன கேட்டுக்கொள்கிறோம். கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த 1 மாத சிறப்பு ஊதியம் பெற்றுத்தர வேண்டுவது.

அனைத்து ஊழியர்களிடமும் மாதாந்திர அறிக்கை பெறுவதை 3ம்தேதி முதல் 5ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயம்செய்து உறுதிப்படுத்துவது போல, பிரதி மாதம் 1ம்தேதி அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க கால நிர்ணயம் செய்திட வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இடத்தில் பணிபுரிய அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: