கபசுர குடிநீர் விநியோகம்

பழநி, ஏப்.19: பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தனியார் அறக்கட்டளை அமைப்பு சார்பில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அரசு சித்த மருத்துவர் டாக்டர் மகேந்திரன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். தொடர்ந்து கொரோனா பரவும் விதம், சமூக விலகல் மற்றும் முகக்கவசம் அணிவதன் அவசியம், கிருமி நாசினி பயன்படுத்துவதன் நன்மை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஊரக வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி,  சமூக ஆர்வலர்கள் திலகவதி, அருள்நிதி, இளந்தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: