கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை

கோவை, ஏப். 15: கொரோ னா கட்டுப்பாடுகள் குறித்து கோவை கடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  வியாபாரிகள் சங்கத்தினருடன் போலீசார் நேற்று ஆலோசனைக் கூட்டம்  நடத்தினர்.இந்நிகழ்ச்சிக்கு காவல் துணை கமிஷனர் ஸ்டாலின் உதவி கமிஷனர் திருமேனி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.இன்ஸ்பெக்டர் இளங்கோ முன்னிலை வகித்தார். இதில், வணிக  வளாகங்கள், உணவு விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றில் அரசால்  அறிவிக்கப்பட்ட வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வணிக வளாகங்கள்,  கடைகளில் பணிபுரியும் நபர்கள் தங்களது செல்போனில் ஆரோக்யசேது  செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். கடைகளுக்கு வரும்  வாடிக்கையாளர்கள் முக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்,  வாடிக்கையாளர்கள் வந்து சென்ற பின்னர் அந்த இடம் கிருமி நாசினி கொண்டு  சுத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Stories:

>