அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மரியாதை

ஈரோடு, ஏப்.15: அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.  ஈரோடு தெற்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திமுக மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில், மாநில நிர்வாகிகள் சந்திரக்குமார், ஈரோடு இறைவன், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி, தொமுச மாவட்ட செயலாளர் கோபால், பொருளாளர் தங்கமுத்து, மாவட்ட பிரதிநிதி சி.மணி, அவல்பூந்துறை ஒன்றிய செயலாளர் குணசேகரன், தலைமைக்கழக பேச்சாளர் இளையகோபால், சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில எஸ்.சி. பிரிவு துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், பெரியசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாஷா, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர் அயுப் அலி, மாவட்ட துணைத்தலைவர் கோதண்டபாணி, நிர்வாகிகள் கண்ணப்பன், வின்சென்ட், யூசுப், சித்தீக், சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் எஸ்சி.எஸ்டி பிரிவு மாவட்ட தலைவி கண்ணம்மா தலைமையில் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பவானி பெரியார் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மாவட்ட செயலாளர் முருகஷ் தலைமையில் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories:

>