சித்திரை பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

மானாமதுரை, ஏப்.15: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மானாமதுரை வீரஅழகர்கோயிலில் உள்ள சவுந்திரராஜ பெருமாளுக்கும் சுந்தரவல்லி தாயாருக்கும் அதிகாலையில் திருமஞ்சனம் நடத்தி சிறப்புபூஜைகள் செய்யப்பட்டது. கோயில் முன் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி, தீர்த்தக்கரை ராக்காயி சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதேபோல வேதியரேந்தல் விலக்கில் உள்ள பஞ்ச முகப்பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. பக்தர்களுக்கு பழங்களும், ஒரு ரூபாய் நாணயமும் வழங்கப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது. தர்மசாஸ்தா அய்யப்பன் கோயில், சித்தி விநாயகர்கோயில், பஞ்சமுக ஆஞ்நேயர் கோயில், பூர்ணசக்கர விநாயகர் கோயில், சோனையா கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

Related Stories: