ரூ.5.84 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்'

காங்கயம், ஏப். 13:  காங்கயம்  ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  ரூ.5.84 லட்சம் மதிப்பிலான கொப்பரை ஏலம் போனது. காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் காங்கயம்  மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளைச் சேர்ந்த 11 விவசாயிகள் 94 மூட்டை (4705 கிலோ) கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முத்தூர், காங்கேயம், வெள்ளகோவில், கொடுமுடி, மூலனூர், பெருந்துறை, ஊத்துக்குளி  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 வியாபாரிகள் பங்கேற்றனர்.

ஏலத்தில் ரூ.5.84 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானது. அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.127க்கும், குறைந்த பட்சமாக ரூ.110க்கும், சராசரியாக ரூ.125க்கும் ஏலம் போனது.  காங்கயம்  மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்,  8000 தேங்காய்களை  விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் ரூ.80 ஆயிரத்திற்கு தேங்காய்  விற்பனையானது. தேங்காய் அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.25க்கு ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடீஸ்வரன் செய்திருந்தார்.

Related Stories:

>