பழநியில் செயல்படாத சிக்னல்களால் போக்குவரத்து நெரிசல்

பழநி, ஏப்.10: பழநி பகுதியில் செயல்படாத சிக்னல்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.

பழநி நகரில் முருகன் கோயில் இருப்பதால் நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் பழநி நகருக்கு வந்து செல்கின்றன. இதனால் பழநி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க முக்கிய சாலைகளான பஸ் நிலைய சாலை சந்திப்பு, மார்க்கெட் சாலை சந்திப்பு, ரெணகாளியம்மன் கோயில் நால்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் சிக்னல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆனால், இந்த சிக்னல்கள் எதுவுமே தற்போது செயல்படாமல் உள்ளன. இதனால் அனைத்து சாலை சந்திப்புகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்தும் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. பல நாட்களாக செயல்படாமல் இருக்கும் சிக்னல்கள் குறித்து சமூக ஆர்வலர் சாஸ்தா கூறியதாவது:

செயல்படாமல் உள்ள சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ரெணகாளியம்மன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருவிழா காலங்களில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை ஊர்களிலிருந்து வரும் பேருந்துகள் ஓம்சண்முகா தியேட்டர் இட்டேரி சாலையின் வழியாக செல்வதைப்போல நிரந்தரமாக இம்முறையிலேயே பஸ் நிலையத்தை அடையுமாறு போக்குவரத்தில் மாற்றம் செய்ய போலீசார் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: