முள்ளிக்குளம் முத்து மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

புளியங்குடி, ஏப்.10: புளியங்குடி அருகே முள்ளிக்குளம் கீழத்தெருவில் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா 5நாட்கள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ேகாயில் நடை திறக்கப்பட்டு கொடியேற்றத்துடன் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 8.30 மணிக்கு பக்தர்கள் பூ இறங்குவதற்கு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலை வலம் வந்து பூ இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் முள்ளிக்குளம் மட்டுமின்றி புளியங்குடி, தலைவன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் தீ அணைப்பு நிலைய அதிகாரி செல்வதரன், புளியங்குடி எஸ்ஐ காசி விசுவநாதன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.இன்று மாலை அக்கினி சட்டி வீதியுலாவும், நாளை மாலை கும்மி பாடலும், 12ம்தேதி மாலை உரவம் தூக்குதலும், 13ம்தேதி மாலை முளைப்பாரியும், 14ம்தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், சமுதாய பெரியோர்கள் செய்திருந்தனர்.

Related Stories: