நாமக்கல் ஆர்டிஓ நடவடிக்கை வரி செலுத்தாமல் இயக்கிய 22 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல், ஏப். 10: நாமக்கல் பகுதியில், வரி செலுத்தாமல் இயக்கிய 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாமா பிரியா, உமாமகேஸ்வரி ஆகியோர், தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் மட்டும், பல்வேறு இடங்களில் தொடர் தணிக்கை மேற்கொண்டு, பல்வேறு விதிமுறை மீறி இயக்கப்பட்ட 286 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.

இதன் மூலம் ₹5.79 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. மேலும் அபராதமாக ₹2.17 லட்சம் விதிக்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட லாரி, பேருந்து, டூரிஸ்ட்வேன் என மொத்தம் 22 வானங்கள் சிறை பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வாகன தணிக்கை தொடர்ந்து நடத்தப்படும். தனியார் வாகனத்தை பொதுமக்கள் வாடகைக்கு பயன்படுத்தகூடாது என, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: