கண்ணூர்பட்டி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

ராசிபுரம், ஏப்.9:புதுச்சத்திரம் அடுத்த கண்ணூர்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. நடப்பாண்டு திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. மதியம் கோயிலில் இருந்து மாரியம்மன் திருத்தேருக்கு இடம்பெயர்ந்தார். தொடர்ந்து  தேரோட்டம் நடந்தது.  கண்ணூர்பட்டி, நெருஞ்சிக்காடு, நாராயணகவுண்டம்பாளையம், சின்னா கவுண்டனூர் உள்ளிட்ட ஊர்களில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்,  மீண்டும் நிலையை வந்து சேர்ந்தது.நாமக்கல், ராசிபுரம், புதன்சந்தை, புதுச்சத்திரம், சிங்களாந்தபுரம், நாமகிரிப்பேட்டை, ஆண்டளூர்கேட், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மேலும், பக்தர்கள் காலை முதலே பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Related Stories: