சங்கரன்கோவிலில் வங்கி ஊழியர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா

சங்கரன்கோவில், ஏப்.9:சங்கரன்கோவிலில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள அரசு வங்கியில் பணிபுரிந்து வரும் 6பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் வங்கி 2 மணிநேரம் அடைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இவர்களில் இருவர் சங்கரன்கோவிலை சேர்ந்தவர்கள். மேலும் நகராட்சி பகுதியில் உள்ள கோமதி நகர் 2வது தெரு, பாரதியார் 7,8ம் தெரு, கிருஷ்ணசாமி வீதி, அம்பேத்கர் நகர் 2வது தெரு, காந்திநகர் கீழ 4ம் தெரு, ரயில்வே பீடர் ரோடு ஆகிய தெருக்களில் வங்கியில் வேலை பார்த்த 2நபர்கள் உள்ளிட்ட 5 பேர்கள் என 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சுகாதார பணிகளை சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா பாஸ்கர், மாதவராஜ்குமார்,  கருப்பசாமி,  சக்திவேல் அந்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சாந்தி கூறுகையில், கொரோனா தொற்று 2வது அலை தமிழகத்தில் பரவி வருவதால் பொதுமக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும், கைகளை சோப்பு கொண்டு நன்கு கழுவியும் தங்களை சுகாதாரமாக பராமரித்து பாதுகாத்துக் கொள்ளுமாறும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவ்வித தயக்கமுமின்றி அரசு மருத்துவமனை, நகர் நல மையத்தில் இலவசமாக கொரோனா  தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related Stories: