கண்ணூர்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா

ராசிபுரம், ஏப்.8: புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டி மாரியம்மன் கோயில்  திருவிழாவையொட்டி அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டி மாரியம்மன் கோயிலில் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தன. நேற்று முன்தினம், குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பொங்கல், மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று மாலை அலகு குத்தியும், அக்னி சட்டி ஊர்வலமும் நடந்தது. தொடர்ந்து பத்ரகாளியம்மன் வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: