குமரியில் வெப்பம் அதிகரிப்பு

நாகர்கோவில், ஏப்.8: குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை சாரல் மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகமாக உள்ளது. பகல் வேளையில் கடும் வெயில் கொளுத்துவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் பலர் வீடுகளில் முடங்கி காணப்படுகின்றனர். கன்னியாகுமரியில் நேற்றைய நிலவரப்படி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98 டிகிரி பாரன்ஹீட்) ஆக இருந்தது.

Related Stories: