இறுதி கட்ட பிரசாரத்தை குறிச்சி சங்கம் வீதியில் நிறைவு செய்தார் குறிச்சி பிரபாகரன்

கோவை,ஏப்.5:கோவை கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளராக குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார்.  இவர் நேற்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பேரூர் செட்டிப்பாளையம்,கல்லாபுரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை துவங்கினார்.  அப்போது அவர் பேசியதாவது:  கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. கடந்த ஐந்து வருடமாக எம்.எல்.ஏ-வாக இருந்த எட்டிமடை சண்முகம் அத்தியாவசிய பிரச்னையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து தரவில்லை. கருத்துக்கணிப்பு முடிவுகள்படி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும். அதன்படி, திமுக ஆட்சி அமைந்தவுடன் கிணத்துக்கடவு மேற்குப் பகுதி ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.

மேலும், மக்களை பற்றி துளியும் கூட கவலைப்படாமல் இருந்த அதிமுக ஆட்சியை மக்களாகிய நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.  அதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னைவெற்றி பெறச்செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர்பேசினார். பின்னர், போத்தனூர் கடைவீதி, சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்டபகுதிகள் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். இறுதியாக குறிச்சி சங்கம் வீதியில் பிரசாரத்தை முடித்து கொண்டார். அதே போல் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் தலைமையில் கிணத்துக்கடவு வாரச்சந்தை பகுதிகளில் இளைஞரணியினர் குறிச்சி பிரபாகரனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: