கொள்ளிடம் பகுதியில் அதிமுக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் பறக்கும் படையினர் தேடுதல் வேட்டை

கொள்ளிடம், ஏப். 4: கொள்ளிடம் பகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலையடுத்து பறக்கும் படையினர் கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.கொள்ளிடம் பகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும்படை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று மாதிரவேளூர், பூங்குடி, குன்னம் ஆகிய கிராமங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கோயில் மற்றும் பொது இடங்களில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஒரு அதிமுக நிர்வாகி வீட்டுக்கு கத்தை கத்தையாக எடுத்து வரப்பட்ட ரூபாய் நோட்டுகளை 2 பெரிய துணிப்பைகள் மூலம் எடுத்து வந்து வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: