பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க தமுமுக மனு

கோவை, ஏப். 2: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் அஹமது கபீர் சார்பாக மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு கடந்த 31ம் தேதி அன்று வாக்கு கேட்டு உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்தார். அவர் கலந்து கொண்ட பேரணியில் வன்முறையை தூண்டி மதக்கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக ஊர்வலத்தில் வந்தவர்கள் ஈடுபட்டனர்.  வழிபாட்டு தலங்கள் முன்பு தரக்குறைவான, கேவலமான வார்த்தைகளால் அனைவரையும் அச்சுறுத்தும் விதமாக பேசியும், கடைகள் மீது கல் எறிந்தும் தாக்குதல் நடத்தினர். டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி போன்ற இடங்களில் பீதியை ஏற்படுத்திய பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் மீதும், அவருடன் வந்த இந்த கும்பல் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: