குலசேகரம் பஸ்நிலையம் நவீனபடுத்தப்படும் மனோதங்கராஜ் எம்எல்ஏ உறுதி

குலசேகரம், ஏப்.2: பத்மநாபபுரம்  தொகுதி திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் நேற்று  குலசேகரம், பெருஞ்சாணி  பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர்  பேசியதாவது: பொதுமக்கள் வசதிக்காக கல்குளம் தாலுகாவை 2ஆக பிரிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தொடர்ந்து  வலியுறுத்தி வந்தேன். இதன் விளைவாக திருவட்டார் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.  இதனை பொது மக்கள் எளிதில் அணுகும் பொருட்டு கல்லடிமாமூடு பகுதியில்  புதியதாக தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு  அங்கு நீதி மன்றம் அமைப்பதற்கும் முயற்சி மேற்கொள்வேன்.குலசேகரம்  பஸ் நிலையம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த பஸ்  நிலையத்தில் எத்தகைய வளர்ச்சி பணிகளும் செய்யப்படாமல் உள்ளது. மீண்டும்  திமுக ஆட்சி அமைந்ததும் குலசேகரம் பஸ் நிலையம் சீரமைத்து நவீனப்படுத்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி அதிமுக  அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள முதியோர், பென்சன், ஆதரவற்றோர் உதவிதொகை  ரூ.1500 ஆக உயர்த்தி வளங்கப்படும்.

குடும்ப பெண்களுக்கு ₹1000  உரிமை தொகை, பெட்ரொல், டீசல் விலை குறைப்பு, பால் விலை குறைப்பு இன்னும்  எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். ஆகவே நீங்கள்  பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு உதய சூரியன் சின்னத்திலும்,  கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு விஜய் வசந்த்துக்கு கை சின்னத்திலும்  வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.பிரசாரத்தில் திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்சன், மேற்கு வட்டார  காங்கிரஸ் தலைவர் காஸ்ட்டன் கிளிட்டஸ், மாவட்ட துணை தலைவர் ராஜரெத்தினம்,   குலசேகரம் பேரூர் திமுக செயலாளர் ஜோஸ் எட்வர்ட், நிர்வாகிகள் சுரேஷ், விஜயராஜ், காந்தி, பெர்ஜின், ஜெஎம்ஆர், ஜெஸ்டின் பால்ராஜ், லெனின், நகர  காங்கிரஸ் தலைவர் விமல் ஷெர்லின்சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: