திருச்சி கே.கே.நகர் பகுதியில் அதிமுகவின் தேர்தல்அறிக்கையை கூறி வெல்லமண்டி நடராஜன் வாக்குசேகரிப்பு

திருச்சி, ஏப். 1: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கிழக்கு பகுதிக்குட்பட்ட கே.கே.நகர், மங்கம்மா சாலை, எல்ஐசி காலனி, காவலர் குடியிருப்பு, கே.சாத்தனூர், உடையான்பட்டி, வடுகப்பட்டி, மன்னார்புரம், இலுப்பூர் ரோடு, கல்லுக்குழி ஆகிய பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு கேட்டார்.

அப்போது பெண்களிடம், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார். எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அவைத்தலைவர் அய்யப்பன், வெல்லமண்டி ஜவஹர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Related Stories: