கொள்ளிடம் பகுதியில் நாய்களுக்கு கருத்தடை ஊசி போட நடவடிக்கை எடுக்கப்படுமா?

கொள்ளிடம், ஏப். 1: கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவைகள் கிராமங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. இந்நிலையில் சில இடங்களில் நகராட்சிகள்,பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் சார்பில் நாய்கள் கொல்லப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் விலங்கு நல ஆர்வலர்கள் கவனத்துக்கு வரும்போது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது. சமீபத்தில் பரமக்குடி நகராட்சியில் பல நாய்கள் கொல்லப்பட்டு வாகனத்தில் ஏற்றி செல்லப்பட் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எனவே நாய்களை கொன்று குவிக்கும் பழக்கத்தை விட்டு விட்டு அவைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கருத்தடை ஊசி செலுத்தி முறைப்படி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக தலைமை செயலாளர் மற்றும் விலங்கு நலவாரிய அலுவலர்களுக்கு கோரிக்கை மனுவை கொள்ளிடம் சமூக ஆர்வலர் காமராஜ் அனுப்பியுள்ளார்.

Related Stories: