சிவகாசி, மார்ச் 26: சிவகாசி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சிவகாசி ஒன்றியம் செங்கமலநாச்சியார் புரம், திருப்பதிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று திமுக கூட்டணி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு பேசுகையில், ``தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். திமுக ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும். பெண்கள் நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் எதுவுமே தீர்க்கபடவில்லை.