ராஜபாளையம், மார்ச் 26: ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் அம்மன் பொட்டல் தெரு, செல்லம் வடக்கு தெரு, திருவள்ளுவர் தெரு, நாடார் தெரு, கூரைபிள்ளையார் கோயில் தெரு, சர்ச் தெரு, மீனாட்சி தியேட்டர் தெரு, விஸ்வகர்மா சாவடி போன்ற பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், மண்ணின் மைந்தனான எனக்கு வாக்களியுங்கள். ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாளச்சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலத்திட்டம் கொண்டுவந்த பெருமை திமுகவையே சாரும். இத்திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளும், தெருக்களும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.