சின்னாளபட்டியில் சாயம் சுத்திகரிப்பு மையம் அமைத்து தரப்படும்

ஐ.பெரியசாமி எம்எல்ஏ உறுதி

சின்னாளபட்டி, மார்ச் 25: திமுக ஆட்சி அமைந்தவுடன் சின்னாளபட்டியில் சாயம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி நேற்று சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரித்தார். கைத்தறி நெசவாளர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசிய ஐ.பெரியசாமி, ‘‘இந்தியாவிலேயே முதன்முதலாக கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் கலைஞர். குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க பேரணையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தது திமுக ஆட்சியே. 10 வருடங்களுக்கு முன்பு சின்னாளபட்டியில் சாயத்தொழிலாளர்கள் நலன் கருதி சாயம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு முயற்சி எடுத்த போது ஆட்சி மாறிவிட்டது. அதன் பின்பு வந்த அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் இல்லை. கைத்தறித்துறை அமைச்சரிடம் பேசியும் சட்டமன்றத்தில் குரல்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மே 2க்கு பிறகு இதற்கான முயற்சிகள் 100 சதவீதம் நடக்கும். இதுபோல கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவுப்பூங்காவும் அமைக்கப்படும்’’ என்றார். கொரோனா ஊரடங்கின் போது கூட்டுறவு சங்கங்களில் நெசவு நெய்வதற்கு நூல் கொடுக்காமல் இருந்தபோது, நான் அதிகாரிகளை சந்தித்து அதற்கான நடவடிக்கைகள் எடுத்ததால் உடனடியாக நூல் வழங்கியதோடு, நிறுத்தி வைக்கப்பட்ட கூலி பணமும் வழங்கினர்’’ என்றார்.பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி, சின்னாளபட்டி பேரூர் முன்னாள் செயலாளர்கள் அறிவழகன், பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகன், அம்பை ரவி மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜகணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: