ஆண்டிபட்டியில் ஆந்திர தர்பூசணி அமோக விற்பனை உள்ளூர் பழத்துக்கு தட்டுப்பாடு

ஆண்டிபட்டி, மார்ச் 24: ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த 2 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிராம புறங்களில் விவசாய கூலித்தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஆண்டிப்பட்டி பகுதியில் இருச்சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கடலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, விழுப்புரம், வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் இருந்து தர்பூசணி வரத்து இருந்தது. ஒரு கிலோ தர்பூசணி பழம் ரூ.8 ரூபாய்க்கு விலையும் இடத்தில் வாங்கப்பட்டது. தற்போது தமிழக பகுதியில் விளைச்சல் இல்லை. இதனால், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கிலோ ரூ.15க்கு வாங்கப்பட்டு தேனி மாவட்டம் கொண்டு வரப்படுகிறது. டீசல் விலை உயர்வால் லாரி வாடகையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் தர்பூசணி பழம் விலையும் அதிகரித்து உள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் ஒரு கிலோ தர்பூசணி பழம் ரூ.20க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.28க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: