தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம் மார்ச் 31ல் தேரோட்டம்

இளையான்குடி, மார்ச் 24:  தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இளையான்குடி அருகே தாயமங்கலத்திலுள்ள முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் அம்மனுக்கு காப்புகட்டி, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பத்துநாள் நடைபெறும் திருவிழாவில், வரும் 30ம் தேதி பொங்கல் திருவிழாவும், 31ம் தேதி மின்சார அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்சியும் நடைபெற உள்ளது. 2ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா முடியும். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பத்துநாள் திருவிழாவை கான தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நேர்த்திக் கடன்களை செலுத்தவும், அம்மனை தரிசிக்கவும் பக்தர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் வருகின்றனர். பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, பரமக்குடி, இளையான்குடி, ஆகிய இடங்களிலிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த  ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: