திருவாரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்திட வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும்: பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர், மார்ச் 24: திருவாரூர் மாவட்டமானது கடந்த 1996ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது உருவாக்கப்பட்டு இதற்காக கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் மாவட்ட தலைநகரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்பது மாவட்ட தலைநகரில் வசித்துவரும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இங்குள்ள 3 தனியார் பள்ளிகளிலும் தலா 2,500 மாணவர்கள் வீதம் மொத்தம் 7,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

மேலும் இந்த 3 பள்ளிகளிலும் இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் புறநகர் பகுதிகளை தேடி செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றை அமைத்திட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தற்போது தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டுமென பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: