மாவட்ட அரசு அலுவலகங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும்

கரூர், மார்ச்23: கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.நேற்று கரூர் நகராட்சிக்குட்பட்ட மத்திய நகரப்பகுதிகளான பசுபதி லேஅவுட், பெரியசாமி நகர், திருப்பதி லேஅவுட், லட்சுமிபுரம் தெற்கு, காந்தி நகர் மெயின்ரோடு, எம்ஜிஆர் நகர், சின்னாண்டாங்கோயில் ரோடு, அண்ணா நகர், ரெங்கநாயகிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 7மணி முதல் 12.30மணி வரையிலும் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தார்.இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 4.30மணி முதல் 9மணி வரை சோமூர் ஊராட்சி பகுதிகளான இடையார்பாளையம், எழுத்துப்பாறை காலனி, கல்லுப்பாளையம், முத்தமிழ்புரம், சோமூர் அண்ணாசிலை, சோமூர் குடித்தெரு, செல்லாண்டிபாளையம், கே கே நகர், திருமுக்கூடலூர், அச்சமாபுரம் போன்ற 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, செந்தில்பாலாஜி பேசியதாவது: கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதூர், வெண்ணைமலை, வெங்கமேடு, கரூர், தாந்தோணிமலை ஆகிய இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தளபதி இலவச திருமண மண்டபங்கள் அமைக்கப்படும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட அரசு அலுவலகங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும் என்றார். இந்த பிரச்சார நிகழ்வில், கரூர்எம்பி ஜோதிமணி, கரூர் திமுக மத்திய நகரப் பொறுப்பாளர் கனகராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

Related Stories: