தேர்தல் விதிமீறல் 91 வழக்குப்பதிவு

ராமநாதபுரம், மார்ச் 21:  ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் பிப்.26 அமலுக்கு வந்தன. இதையடுத்து விதிமீறல்கள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுக., நாம் தமிழர் கட்சி, இந்து மக்கள் கட்சி என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகு அதிமுக. மீது 28, அமமுக மீது 10, காங்கிரஸ் கட்சி மீது ஒரு வழக்கு, பாஜக. மீது 3 வழக்குகள், நாம் தமிழர் கட்சி மீது 5 வழக்குகள் என 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: