மக்களவை தேர்தலில் போல பணியாற்றி சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தேடித்தர வேண்டும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வ.ம. சண்முகசுந்தரம் வேண்டுகோள்

தொண்டாமுத்தூர்,மார்ச்21:மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக வடவள்ளி வ.ம.சண்முக சுந்தரம் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவை அதிகாரிகள் நேற்று ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து வாக்கு சேகரிப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடவள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் பேசியதாவது: மிக குறுகிய காலத்தில் தொகுதியில் உள்ள முக்கிய திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை முழுவதும் சந்திக்க முடிய வில்லை.சந்திக்க முடியாத நிர்வாகிகள் பொறுத்துக் கொள்ளும்படி என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் பணிகளுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. பணிகள் தொடர்பான விவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரவு,பகல் பாராமல் பணியாற்றி எவ்வாறு வெற்றி பெற்றோமோ, அதே போல் சட்டமன்ற தேர்தலிலும் முழு கவனமாக இருந்து வெற்றிக்கு பாடுபடவேண்டும். மேலும் 234 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார். கோவை வடக்கு தொகுதியில் அரும்பாடு பட்டு திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடு,வீடாக சென்று தேர்தல் அறிக்கையை விரிவாக எடுத்து கூற வேண்டும். பெண்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு வேட்பாளர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார்,பெறுப்புக்குழு உறுப்பினர் குப்புசாமி,மகளிரணிசரஸ்வதி,தெய்வம் மகாலட்சுமி, பகுதி கழக செயலாளர்கள் பாக்கியராஜ்,கிருஷ்ணராஜ் ,ரவி,கோவை லோகு,அஞ்சுகம் பழனியப்பன்,வட்டச் செயலாளர்கள், வக்கீல் அன்பு செழியன்,காந்திபுரம் நந்து,வடவள்ளி துரைசாமி , உ மதிமுக செல்வராஜ் ,வக்கீல் வெண்மணி,விடுதலை சிறுத்தைகள் இலக்கியன், கம்யூனிஸ்டு ஜேம்ஸ்,கொங்கு பிரேம், இந்திய முஸ்லீம் லீக் முகம்மது உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: