நேரத்தை சினிமாவிற்கு செலவழிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு பயனுள்ள காரியங்களை செய்யுங்கள்

 

புதுக்கோட்டை, ஜூலை 28: நேரத்தை சினிமாவிற்கு செலவழிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு பயனுள்ள காரியங்களை செய்யுங்கள் என்று திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி அறிவுரை வழங்கி உள்ளார். புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமயம் பொதுமக்களின் உணர்ச்சிகளை வெளிபடுத்துகிறோம். மாற்றம் வேண்டும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிய விசிலர்களே. கொடுத்த பட்டாவை திரும்ப கொடுப்பதுதான் மாற்றமா? நீங்கள் கொடுத்திருக்கும் பட்டாவில் ஒரிஜினல் தன்மை உள்ளதா? ஏற்கனவே பட்டாவை கொடுத்துவிட்டார்கள். கொடுத்த பட்டாவையே திரும்ப கொடுத்து சென்றிருக்கிற விளம்பரதாச அமைச்சர்களே.

இனிமேலாவது தங்கள் நேரத்தை சினிமாவிற்கு செலவழிப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் மக்களுக்கு பயனுள்ள காரியங்களை செய்யுங்கள். 10 நிமிடமாவது மக்களுக்கு ஒதுக்குங்கள். புதுக்கோட்டையை நாங்கள் முன்னேற்றி இருக்கிறோம். அதை பின்தங்கியதாக மாற்றிவிடாதீர்கள். திருமயத்தில் பட்டா கொடுத்ததை திருப்பி கொடுப்பதில் என்ன கொண்டாட்டமா? சனி சந்தை பனையூரில் என்றால் ஞாயிறு சந்தை புதுக்கோட்டையிலா? ஆள் பிடிக்க திருமயத்திற்கு போனீர்கள். வந்தார்கள், பிரியாணி சாப்பிட்டார்கள் சென்றுவிட்டார்கள். இது தான் மாற்றம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: