அரிசி விலை ஒரே மாதத்தில் 20 சதவீதம் உயர்ந்து விட்டது:என்ன சொல்லப் போறார் முதல்வர்; கேட்கிறார் அதிமுக மாஜி அமைச்சர்

 

மதுரை: தமிழகத்தில் ஒரே மாதத்தில் அரிசி விலை 20 சதவீதம் உயர்ந்ததால் மக்கள் கலங்கிப் போயிருக்கின்றனர் என அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். அவர் நேற்று வௌியிட்டுள்ள வீடியோ பதிவு:அனைத்து வகை அரிசி விலையும், கடந்த ஒரு மாதத்தில் ரூ.5 முதல், ரூ.20 வரை உயர்ந்து, ஏழை, நடுத்தர மக்களை பாதித்துள்ளது. 26 கிலோ அரிசி மூட்டை ரூ.250 முதல் ரூ.400 வரை விலை அதிகரித்திருக்கிறது.

ஓராண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவை. 75 லட்சம் டன் அரிசிதான் உற்பத்தியாகிறது. இவ்வாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. ஜூன், ஜூலைக்கான நீரை கர்நாடகம் திறந்துவிடவில்லை.இதனால் டெல்டா பகுதிகளில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. நமது தேவைக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உயர் ரக, சன்ன ரக அரிசி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது.

இம்முறை கர்நாடகாவில் போதிய மழையின்றி சன்ன ரக அரிசி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு அவர்கள் அனுப்பும் அரிசியின் அளவும் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 20 நாட்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. நாளுக்கு நாள் அரிசி விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

ரேஷன் கடை மூலம் வழங்கும் விலையில்லா அரிசியும், சமைத்து சாப்பிடும் தரத்திற்கு இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. மக்களுக்கு ஒரு பிரச்னைனா, இந்த விஜய் வருவான், கேள்வி கேட்பான்னு சொன்னாரே? இப்போ அரிசி விலை உயர்ந்திருக்கு, என்ன சொல்ல போறாரு? பொய் பேசுவதற்கு தண்டனை என்ன தெரியுமா விஜய்? அவர் உண்மையை பேச ஆரம்பிக்கிற போது, ஒருவரும் அவரை நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories: