காரியாபட்டி அருகே சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு முகாம்

காரியாபட்டி, மார்ச் 14: காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது பற்றி விஏஓ காசிமாயன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் அதை பொதுமக்களுக்கு தெளிவாக விளக்க செல்போன், கணினி போன்றவற்றிலும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கல்லுப்பட்டி, பாப்பனம், கல்குறிச்சி, மல்லாங்கிணர் உட்பட அனைத்து கிராமங்களிலும் வருவாய்த்துறையின் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதிகாரி ஆலோசனை

சாத்தூரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் விருதுநகர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் முகமது அலி தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புஷ்பா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடேஷ், ராஜாஉசேன், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு அலுவலர்கள், தேர்தல்நிலை ஆய்வுக்குழு அலுவலர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட தேர்தல் நடத்தும் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்  வாக்குசேகரிப்பு, பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் ஏற்படும் செலவின .விவரங்கள், பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் உடன் செல்லும் வாகனங்கள் குறித்த ஆய்வு மற்றும் கண்காணிப்பு  பற்றிய ஆலோசனை நடைபெற்றது.

Related Stories: