திருச்சுழி, மார்ச் 13: திருச்சுழியில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் அறிவித்த நிலையில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சுழியிலிருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலை வழியாக காரைக்குளம், தாமரைக்குளம், உடையனாம்பட்டி, சென்னிலைக்குடி உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. தேர்தல் விதிகள் பின்பற்றபடுவதால் தாலுகா அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனைக்குட்படுத்தப்பட்டு இவ்வழியாக செல்ல அனுமதிக்கின்றனர். நேற்று வெளியூரிலிருந்து கிராம கோயிலில் தெய்வ வழிப்பாட்டிற்காக வாகனங்களில் வந்த பக்தர்களை இச்சாலையை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.