சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே? வானதி குற்றச்சாட்டு

சென்னை: சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே என்று மக்கள் தேடும் நிலைக்கு வந்து விட்டது என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் ஆரம்பித்த நாட்களில் சுறுசுறுப்பாக இயங்கிய முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடுகள் இப்போது எங்கே என்று தமிழக மக்கள் தேடும் நிலைக்கு வந்து விட்டது.

தமிழக அரசு பள்ளிகளில் தற்போது மாணவிகளுக்கு தற்காப்புகலை பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் பெண்கள் பணிபுரியும் இடங்களிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து பெண்கள் மீதான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: