மதுரை மாவட்டத்தில் கொரோனா 2ம் கட்ட அலை பரவாமல் தடுக்க நடவடிக்கை கலெக்டர் அன்பழகன் பேட்டி

மதுரை, மார்ச் 11: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, நூறு சதவீதம் வாக்களிக்க வாக்காளருக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ பேரணி நேற்று மதுரை கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.  கட்டாயம் வாக்களிக்க  வேண்டும் என ஆட்டோ ஒட்டுனர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, தாசில்தார் முத்துவிஜயன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். பின்பு கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் கொரோனா 2ம் கட்ட அலை பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இதற்காக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். வடமாநிலத்தில் இதன் பாதிப்பு உள்ளது.

மத்திய, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் அறிவுரைப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணி ஒரு புறம் நடைபெற்றாலும், கொரோனா தடுப்பு பணிகள் மற்றொரு புறம் நடைபெறுகிறது, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தேர்தல் தொடர்பாக பயிற்சி நடைபெறும் இடங்களில் தடுப்பூசி வழங்கப்படும்’’ என கூறினார்.

Related Stories: