பெங்களூரு: கணவனை விட மனைவி அதிகம் சம்பளம் வாங்கினால் அவருக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் 2024ல் திருமணம் செய்து கொண்ட தம்பதி சில மாதங்களுக்குள் பிரிந்துவிட்டனர். கணவரின் மாதச் சம்பளம் 60,646 ஆகவும், மனைவியின் மாதச் சம்பளம் 1 லட்சமாகவும் இருந்தது. இருப்பினும், மனைவி ஜீவனாம்சம் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விசாரணையை நடத்திய விசாரணை நீதிமன்றம், மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சில்லக்கூர் சுமலதா, ‘கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார். மனைவி 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளலாம். மேலும் மனைவிக்கு குழந்தைகள் அல்லது வேறு கடமைகள் இல்லாததைக் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
