ராணுவ சிறப்பு ரயில்களின் அளவை குறைக்க முடியாது: ரயில்வே அமைச்சகம் கறார்

 

புதுடெல்லி: ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல ரயில்வே துறை சார்பில் ராணுவ சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், ராணுவ சிறப்பு ரயில்களின் குறைந்தபட்ச பெட்டிகளின் எண்ணிக்கையை 30ல் இருந்து 20 ஆக குறைக்கவும், அதற்கேற்ப சரக்கு கட்டணத்திலும் சலுகை வழங்கவும் ராணுவம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் நிராகரித்துள்ளது. தற்போதைய ரயில்வே விதிமுறைகளின்படி, ராணுவ சிறப்பு ரயில்களுக்கான கட்டண கணக்கீடு குறைந்தபட்சம் 30 பெட்டிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்டிகளின் எண்ணிக்கையை 20 ஆக குறைத்தால் இயக்க செலவு எந்த விதத்திலும் குறையப் போவதில்லை. எனவே, 30 பெட்டிகளுக்கு கீழ் தளர்வு வழங்குவது நடைமுறையில் சாத்தியமில்லை என ரயில்வே வாரியம் ராணுவத்துக்கு எழுதிய கடிதத்தில் விளக்கி உள்ளது.

Related Stories: