டிஆர்டிஓவுக்கான புதிய நிதி அதிகார கொள்கை:ஒன்றிய அரசு வெளியீடு

 

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மேற்கொள்ளும் ஆராய்ச்சி திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் படைகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுத அமைப்புகள் விரைந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ‘டிஆர்டிஓவுக்கான நிதி அதிகாரப் பகிர்வு 2026’ என்ற புதிய நிதி கட்டமைப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார். இந்த புதிய கட்டமைப்பு மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் செயல்திறன், பொறுப்புணர்வு மற்றும் காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவேற்றுவது மேம்படும்.

மேலும், தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு வலுப்பெற்று, ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தன்னிறைவு இந்தியா) இலக்கை அடையவும், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அதிகரிக்கவும் உதவும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மேலும், சோதனை, மதிப்பீடு, ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கிய மாற்றங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

 

Related Stories: