ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்களின் வீர மரணத்தை மறைத்த ராஜ்நாத் சிங் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

 

புதுடெல்லி: காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா தகுந்த பதிலடி தந்தது. இதில் 6 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய அரசு பொது வெளியில் தெரியப்படுத்தியது. அவர்களின் பெயர் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரசின் முன்னாள் ராணுவ வீரர்கள் துறை தலைவர் கர்னல் ரோஹித் சவுத்ரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் எந்த இந்திய வீரரும் பலியாகவில்லை என தவறான தகவல் தந்துள்ளார்.

இதற்காக அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நமது வீரர்களின் தியாகத்தை மறைத்து அவர்களின் மரியாதையை மோடி அரசு பறித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தவறான தகவல் சொன்னதற்காக ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும். மோடி அரசு ராணுவ வீரர்களை வைத்து அரசியல் செய்கிறது. அவர்களுக்கும் நாட்டிற்கும் துரோகம் செய்கிறது’’ என்றார்.

Related Stories: