சீர்காழி தாசில்தார் அலுவலகம் எதிரே தரமற்ற ரேசன் அரிசியை சாலையில் கொட்டி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சீர்காழி, மார்ச் 10: ரேசன் கடைகளில் வழங்கிய தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாசில்தார் அலுவலகம் எதிரே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்லப்பன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று உணவுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு விதமான அரிசியையும் வாங்க வேண்டுமென பொதுமக்களை ஊழியர்கள் நிர்பந்தம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். மேலும் ரேஷன் கடையில் வழங்கிய தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர்.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாதர் சங்கத்தினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாய தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: