தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வால் 30ம் தேதி ஓய்வு: ராஜரத்தினம் மைதானத்தில் இன்று பிரிவு உபசார நிகழ்ச்சி

சென்னை: தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வால் வரும் 30ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அவரது பிரிவு உபசார நிகழ்ச்சி இன்று எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கிறது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் உள்ளார். இவரது பணிக்காலம் வரும் 30ம் தேதி முடிவடைகிறது. இருந்தாலும், இவருக்கு தவெக அரசு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். அந்த பணியிடத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் இருந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சீமா அகர்வால், கடந்த 1966ம் ஆண்டு பிறந்தார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். தமிழக கேடரில் கடந்த 1990ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக சீமா அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். காவல்துறையில் பல்வேறு மாவட்டங்களில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி இவர், சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாகவும், சீருடைப்பணியாளர் தேர்வாணையம் இயக்குநராகவும் தற்போது தீயணைப்புத்துறை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான பரிந்துரை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவரது பணிக்காலம் வரும் 30ம் தேதி முடிவடைவதால் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தமிழக அரசு நியமிக்கப்படவில்லை. கடந்த 2006ம் ஆண்டு காவல்துறையின் சிறந்த சேவைக்கான பதக்கம், 2014ம் ஆண்டு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றுள்ளார். இவரது பணிக்காலத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் இன்று மாலை 4 மணிக்கு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: