தமிழக காவல்துறையில் 15 அதிகாரிகள் பணியிட மாற்றம்: 5 ஏ.எஸ்.பி.களுக்கு பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலர் மணிவாசன் உத்தரவு

சென்னை:தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர காவல்துறை நல்வாழ்வு மற்றும் எஸ்டேட் துணை கமிஷனராக இருந்த கண்ணன் தாம்பரம் மாநகர தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவு துணை கமிஷனராகவும், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த வேல்முருகன் காவல்துறை இயக்குநர் அலுவலகம் நவீனமயமாக்கல் உதவி ஐஜியாகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டாலின் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமேஷ் பாபு சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கீதாஞ்சலி சென்னை மாநகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுந்தரவடிவேல் சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராகவும்,

மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக இருந்த ரமேஷ் கிருஷ்ணன் திருப்பூர் மாநகர வடக்கு துணை கமிஷனராகவும், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாக இருந்த மகேஸ்வரி ஆவடி மாநகர செங்குன்றம் துணை கமிஷனராகவும், சென்னை கோயம்பேடு துணை கமிஷனராக இருந்த உதயகுமார் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் சென்னை அடையாறு துணை கமிஷனராகவும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உதவி எஸ்பியாக இருந்த குணால் உத்தம் ஷ்ரோட் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை கோயம்பேடு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், நாமக்கல் உதவி எஸ்பியாக இருந்த ஆகாஷ் ஜோஷி எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் மாநகர தெற்கு துணை கமிஷனராகவும், மதுரை மாவட்டம் திருமங்கலம் உதவி எஸ்பியாக இருந்த அன்ஷூல் நகர் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருநெல்வேலி மாநகர மேற்கு துணை கமிஷனராகவும், திருப்பூர் மாவட்டம் காங்கேயன் உதவி எஸ்பியாக இருந்த அர்பிதா ராஜ்புத் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்பியாகவும், திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் உதவி எஸ்பியாக இருந்த பனவத் அரவிந்த் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருச்சி மாநகர வடக்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: