அப்பாவும், பையனும் அடிச்சிக்கிட்டாங்க… சேர்ந்துக்கிட்டாங்க… மாஜி பாமக எம்எல்ஏ புலம்பல்

சேலம்: பாமக ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இருவரும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தனர். இந்த நிலையில் நேற்று தந்தை ராமதாசும், மகன் அன்புமணியும் சந்தித்து பாசத்தோடு ஆரத்தழுவியது கட்சியினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக ராமதாசுக்காக அன்புமணியை கடுமையாக விமர்சித்த நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.

இதுகுறித்து ராமதாசின் தீவிர ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் கூறியதாவது: ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டதால், என்னைப்போல் பலர் வீழ்ந்தோம். பாதிக்கப்பட்டோம். என்மீது தாக்குதல் முயற்சி கூட நடந்தது. ஆனால் அவற்றையெல்லாம் மறந்து இன்று இருவரும் இணைந்துள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இனி எல்லோரும் இணைந்து செயல்படுவோம். இருவரிடையே பிரிவு இல்லாமல் இருந்திருந்தால் சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 10 பாமக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். சவுமியா அன்புமணி துணை முதல்வராகவும், என்னை போன்றவர்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றிருப்போம். அது நடக்கவில்லை என்பது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அருள் கூறினார்.

Related Stories: