இந்திய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசு உதவி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கேபிஏ இன்ஜினியரிங் மற்றும் எக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி மனிதவள அமைச்சகத்தின் சேவை மையத்தை அணுகினார்கள். இதனை தொடர்ந்து தங்களது முதலாளிகளால் நான்கு மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாமல் சிக்கி தவிக்கும் இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தலா 200 சிங்கப்பூர் டாலர் நிதியுதவியை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மிகப்பெரிய தொழிலாளர் இயக்கமான தேசிய தொழிற்சங்க காங்கிரசும், புலம் பெயர்ந்த தொழிலாளர் மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து ஊதியம் பெறாமல் அவதிக்குள்ளாகி இருக்கும் 400 தொழிலாளர்களுக்கு அன்றாட செலவுகளை சமாளிப்பதற்கு உதவும் வகையில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 100 சிங்கப்பூர் டாலர் ரொக்கமாகவும், 100 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள சூப்பர் மார்க்கெட் டோக்கன்களையும் வழங்குகின்றது. தொழிலாளர்களை கைவிட்டுவிட்டு ஊதியம் வழங்காமல் இருக்கும் செயலை தேசிய தொழிற்சங்க காங்கிரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: